மோடிக்கு இனிப்பு ஊட்டி பிரணாப் வாழ்த்து

புதுடில்லி : இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக, நாளை, பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதையொட்டி அவர், மூத்த தலைவர்களை சந்தித்து, வாழ்த்து பெற்று வருகிறார்.இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், முன்னாள் ஜனாதிபதியுமான, பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்கு, பிரதமர் மோடி, நேற்று சென்றார்.

அவரை, பிரணாப் வரவேற்றார். பின், தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, மோடிக்கு, பிரணாப், இனிப்பு ஊட்டி, வாழ்த்து தெரிவித்தார்.இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை, பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:பிரணாப் முகர்ஜி, மிகச் சிறந்த ராஜதந்திரி. அவரை சந்திப்பது, எப்போதுமே மகிழ்ச்சி தரும் விஷயம். அவரது பொது அறிவும், வியூகங்களும், அபாரமானவை. அவரது ஆசியை பெற்றது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு, அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு நன்றி தெரிவித்து, பிரணாப் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடியுடனான சந்திப்பு, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. கூடுதல் பலத்துடன், அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதற்கு வாழ்த்துகள். அவரது எண்ணம், தொலைநோக்கு பார்வை ஆகியவை நிறைவேற வாழ்த்துகள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)