பதவி விலக வேண்டாம்: ராகுலிடம் ஸ்டாலின் பேச்சு

''காங்., தலைவர் பதவியிலிருந்து, நீங்கள் விலகக் கூடாது; உங்களை, என் சகோதரனாக கருதி, இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறேன்,'' என, ராகுலிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.லோக்சபா தேர்தலில், வெற்றியை எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு, படுதோல்வி கிடைத்துள்ளது. உ.பி., மாநிலம், அமேதியில் போட்டியிட்ட, ராகுல் தோல்வி அடைந்தார்.

ஆனால், கேரள மாநிலம், வயநாட்டில் வெற்றி பெற்றார்.தென் மாநிலங்கள் மட்டும், காங்கிரசுக்கு கை கொடுத்ததால், அக்கட்சிக்கு, 52 தொகுதிகள் கிடைத்துள்ளன. சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து, டில்லியில், மேலிட தலைவர்கள் விவாதித்தனர். அப்போது, தலைவர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக, ராகுல் தெரிவித்தார். அவரின் ராஜினாமா முடிவுக்கு, சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'ராகுல் ராஜினாமா செய்தால், தென் மாநிலங்களை சேர்ந்த, காங்கிரஸ் தொண்டர்கள் தற்கொலை செய்வர்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.இந்நிலையில், நேற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ராகுலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சமாதானப்படுத்திஉள்ளார்.அப்போது, ஸ்டாலின் கூறியதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. நானும், கட்சி பொறுப்பிலிருந்து விலக நினைத்தேன்.

ஆனால், கருணாநிதி, என்னை சமாதானப்படுத்தினார். இப்போது, தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. போர்க்களத்தில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.எனவே, தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிடுங்கள்; உங்களை, என் சகோதரனாக கருதி, இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு, ராகுலிடம் அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)