'கட்சி எனக்கு; வாக்காளர் உனக்கு'

காங்., கட்சியில் பலரும் கடுமையாக முயன்ற நிலையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன், மகனுக்கு ஈரோடு கிழக்கு, 'சீட்' பெற்று விட்டார். அதிருப்தி அடைந்த மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி ஆகியோர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராகினர்.
தகவல் அறிந்த இளங்கோவன், 'கை சின்னம் தானே நிற்கிறது; வேறு ஏதாவது உதவி செய்கிறேன். என் மகனுக்கு உதவுங்கள்' என கேட்டதும், அதிருப்தியாளர்கள் சமாதானம் அடைந்தனர்.அதேநேரம், தி.மு.க., மாவட்ட செயலர் சு.முத்துசாமி, கம்யூ., கட்சி, ம.தி.மு.க., - வி.சி., மற்றும் பிற கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளை இளங்கோவன் நேரடியாகசந்தித்து வெற்றிக்காக உழைக்குமாறு கேட்டு நடையாய் நடக்கிறார்.
'வாக்காளர்களை நீபாத்துக்கோ; கட்சிக்காரங்கள நான் பாத்துக்குறேன்' என, மகனிடம் சொல்லிவிட்டு இந்த வயதிலும் இறங்கி வேலை செய்கிறார் இளங்கோவன்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)