3 ஆண்டுக்கு முன் பதவியேற்பு நினைவு கூர்ந்த மம்தா

கோல்கட்டா : மேற்கு வங்க முதல்வராக, இரண்டாவது முறையாக பதவியேற்ற தினத்தை, மம்தா பானர்ஜி நேற்று நினைவுகூர்ந்தார்.மேற்கு வங்கத்தில், 2016ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, 2016, மே 27ல், இரண்டாவது முறையாக, மேற்கு வங்க முதல்வராக, மம்தா பானர்ஜி பதவியேற்றார்.

மூன்று ஆண்டுக்கு முன், முதல்வராக பதவியேற்ற தினத்தை நினைவுகூர்ந்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், மம்தா பானர்ஜி கூறியதாவது:என், 'தாய், நிலம், மக்கள்' அரசு, மூன்று ஆண்டுக்கு முன், இதே நாளில், இரண்டாவது முறையாக பதவியேற்றது.மேற்கு வங்க மக்கள், எங்கள் மீது நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியை அளித்தனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், தொடர்ந்து அவர்களுக்காக பணியாற்றுவோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)