பா.ஜ., தலைவர் மீது நடவடிக்கை

புதுடில்லி : 'மேற்கு வங்க மாநில, பா.ஜ., பொருளாளர் சவர் தனஞ்சய் மீது, ஏழு நாட்களுக்கு, எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க மாநில, பா.ஜ., பொருளாளர் சவர் தனஞ்சய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, என் மீது, மேற்கு வங்க போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், என் மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டமிட்டுள்ளனர்.

அதனால், என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, ரத்து செய்ய வேண்டும். மேற்கு வங்கத்தில், வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.'சவர் தனஞ்சய் மீது, ஏழு நாட்களுக்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' என, மேற்கு வங்க போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், சவர் தனஞ்சயிக்கு உத்தரவிட்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)