கர்நாடகா குமாரசாமி அரசு தப்புமா?

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பா.ஜ.,வில் இணையப்போவதாக தெரிவித்துள்ளதால் குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 80 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 இடங்களும் கிடைத்தன. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜ.,வை வரவிடாமல் தடுக்க இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து குமாரசாமி முதலமைச்சரானார்.
இந்நிலையில் பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கி கோலி உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.இந்நிலையில் சிஞ்சோலி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதனிடையே 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களான ரமேஷ் ஜார்கிகோலி, சுதாகர் ஆகியோர் பாஜ மூத்த தலைவரான எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது காங்கிரசில் இருந்து மேலும் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் பா.ஜ.,வுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)