கடமை அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

ஆமதாபாத்: கடந்த, 1942 - 1947ல், நமது நாடு, உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அந்தப் பெருமையை நாம் இழந்துவிட்டோம். மீண்டும் அந்தப் பெருமையை பெற்றுத் தர வேண்டும். அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகள், நமக்கு மிகவும் முக்கியம் எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, அரசுக்கான கடமை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

அஞ்சலிசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இரண்டாவது முறையாக, மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், குஜராத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, விமான நிலையம் அருகில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.


துணை நிற்கும் குஜராத்
ஆமதாபாத்தில் பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சூரத் தீவிபத்து பெரும் சோகத்தை அளித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துடன் உடன் இருக்கிறேன். மாநில அரசுடன் தொடர்பில் உள்ளேன். பா.ஜ.,வின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். மக்களின் ஆசியே எனது பலம். தொண்டர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் கடின உழைப்பினால் வெற்றி கிடைத்துள்ளது. குஜராத் எப்போதும் எனக்கு துணை நிற்கிறது. பா.ஜ., அலுவலகத்தில் பல மணி நேரம் பணியாற்றியுள்ளேன். பல விஷயங்களை கற்று கொண்டுள்ளேன். போராடுவதற்கு இங்கு தான் கற்று கொண்டேன்.


வளர்ச்சி பயணம்
குஜராத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. தொழிற்சாலைகள் இங்கு அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பா.ஜ., ஆட்சியில் மாநிலம் வளர்ந்துள்ளது. மாநிலத்திற்கு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான பயணம் இங்கு தான் துவங்கியது. 2014ல் இங்கிருந்து வேதனையுடன் கிளம்பி சென்றேன். குஜராத் மாடல் பல அதிர்வுகளை உண்டாக்கியது. எனது கடமையை முழுமையாக நிறைவேற்ற முயற்சி செய்வேன். மே.வங்கத்தில் மம்தா ஆட்சியின் கீழ் பயம் கலந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

மக்களின் தேர்தல்
தேர்தல் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளோம். பா.ஜ., 300 மேல் இடங்கள் கிடைக்கும் எனக் கூறியதை கிண்டல் செய்தனர். அனைத்து சாதனைகளையும் பா.ஜ, முறியடித்துள்ளது .பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் மக்கள் ஓட்டளித்துள்ளனர். நமக்காக மக்கள் போராடியுள்ளனர். 300 இடங்களுக்கும் மேல் அளித்துள்ளனர். வெற்றி நம்மை பெருமைபடுத்தியுள்ளது . வலிமையான அரசு அமைய மக்கள் ஓட்டளித்துள்ளனர். கடந்த, 1942 - 1947ல், நமது நாடு, உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அந்தப் பெருமையை நாம் இழந்துவிட்டோம். மீண்டும் அந்தப் பெருமையை பெற்றுத் தர வேண்டும். அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகள், நமக்கு மிகவும் முக்கியம். தற்போது கடமை அதிகரித்துள்ளது. இது மக்களின் தேர்தல், பா.ஜ,வின் தேர்தல் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.


பிரதமர் மோடி பேசி முடித்ததும், அங்கு கூடியிருந்த பா.ஜ., தொண்டர்கள் , தங்களது மொபைல் மூலம் டார்ச் லைட் அடித்து மோடிக்கான ஆதரவை தெரிவித்தனர்.

ஆசி பெற்றார்பிரதமர் நரேந்திர மோடியின் தாய், ஹீராபென், 95. குஜராத் மாநிலம், காந்திநகர், தன் மற்றொரு மகனுடன் வசிக்கிறார்.முக்கிய நிகழ்வுக்கு முன், தன் தாயை சந்தித்து ஆசி பெறுவதை, பிரதமர் மோடி, வழக்கமாக வைத்துள்ளார். கடந்த, 2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்ற போது, தன் தாயிடம் ஆசி பெற்ற பின் தான், குஜராத்திலிருந்து, பதவியேற்க டில்லிக்கு புறப்பட்டார். கடந்த மாதம், ஓட்டு போடுவதற்காக, ஆமதாபாத்துக்கு சென்ற மோடி, தன் தாயை சந்தித்து, 20 நிமிடம் பேசினார். அவரிடம் ஆசி பெற்ற பின் தான், வாரணாசி தொகுதியில் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் அமோக வெற்றி பெற்று, வரும் 30ம் தேதி மாலை 7 மணிளவில் இரண்டாவது முறை பிரதமர் பதவி ஏற்க உள்ளதை தொடர்ந்து, மோடி, தன் தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.


மோடியால் வெற்றி
முன்னதாக அமித்ஷா பேசியதாவது: குஜராத்தில் பா.ஜ., தொண்டர்களின் உற்சாகம் மேற்கு வங்கத்தையும் சென்றடைய வேண்டும். 2 சீட்களுடன் கணக்கை துவக்கிய பா.ஜ., இன்று 303 சீட்களை தாண்டியது. குஜராத்தை இரு கை கூப்பி வணங்குகிறேன். மோடியை வரவேற்க எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் இங்கு கூடியுள்ளனர். பிரதமர் மோடியை உற்சாகபடுத்த இங்கு கூடியுள்ளோம். மோடிக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தொடர்ந்து குஜராத் உள்ளது. குஜராத்தில் பா.ஜ., மோடி வலிமை பெற வைத்துள்ளார். மோடியின் வளர்ச்சி யாத்திரை இங்கு தான் துவங்கியது.2014, 2019ல் மோடியால் வெற்றி கிடைத்தது. குஜராத்தில் குண்டர்களின் ஆட்சியை மோடி தான் முடித்து வைத்தார்.மோடி மீது வைத்த நம்பிக்கையை தேசம் வெளிப்படுத்தியுள்ளது.


பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி மட்டுமே பதிலடி கொடுத்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் கவனம் செலுத்த உள்ளோம்.அவர்களின் இடத்திற்குள் நுழைந்து, அங்கேயே அவர்களை கொன்றோம்.இந்தியாவை புதிய உச்சத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றார்.அவரின் கோஷங்கள் உலகம் முழுவதும் பிரதிபலிக்கிறது.அவரை உலக நாடுகள் மதிக்கின்றன. ஏழைகளுக்காக கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கிடைத்தது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.தொடர்ந்து சூரத் நகரில் நடந்த தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)