கமல் கட்சிக்கு 3வது இடம்

சென்னை : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சென்னை தொகுதிகளில், மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு, கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன.


தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தேசிய கட்சிகளுக்கும் இங்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் மாற்று கட்சி வேண்டும் என பலரும் நினைக்கின்றார்கள். இந்த லோக்சபாவில் ம.நீ.ம நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தினகரனின், அ.ம.மு.க., கட்சி, பின்னடைவை சந்தித்துள்ளது. மக்கள் நீதி மையம் கட்சிக்கு, வடசென்னையில், 1 லட்சத்து, 2 ஆயிரத்து, 980 ஓட்டுகள்; மத்திய சென்னையில், 92 ஆயிரத்து, 249 ஓட்டுகள்; தென் சென்னையில், 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 465 ஓட்டுகள் என, 3 லட்சத்து, 30 ஆயிரத்து, 694 ஓட்டுகள் கிடைத்து உள்ளன. இதன் வாயிலாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தை, மக்கள் நீதி மையம்பெற்றுள்ளது.


பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், 20 ஆயிரத்து, 508 ஓட்டுகளை, கமல் கட்சி பெற்றுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கும், கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன. அக்கட்சிக்கு, வடசென்னையில், 30 ஆயிரத்து, 886 ஓட்டுகள்; மத்திய சென்னையில், 50 ஆயிரத்து, 222 ஓட்டுகள்; தென்சென்னையில், 60 ஆயிரத்து, 515 ஓட்டுகள் என, 1 லட்சத்து, 41 ஆயிரத்து, 623 ஓட்டுகள்கிடைத்துள்ளன.அ.ம.மு.க.,வை காட்டிலும், அதிகப்படியான ஓட்டுகளை பெற்று, சென்னை மாவட்டத்தில், நான்காம் இடத்தில், நாம் தமிழர் கட்சி உள்ளது.பெரம்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, அ.ம.மு.க., வேட்பாளர் வெற்றிவேல், 6 ஆயிரத்து, 274 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)