ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை

புதுடில்லி, -லோக்சபாவில் பெரும்பான்மை பெற்றுள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ராஜ்யசபாவில், அடுத்த ஆண்டு இறுதியில், பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலிலும், தே.ஜ., கூட்டணி, 336 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது. ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், மத்திய அரசால், பல மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.மேலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா பல நாட்கள் முடங்கியது. நிலம் கையப்படுத்தும் மசோதா, முத்தலாக் தடை மசோதா உட்பட பல மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், அரசால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.லோக்சபா, எம்.பி.,க்கள், மக்களால் நேரிடையாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், ராஜ்யசபா, எம்.பி.,க்கள், எம்.எல்,ஏ.,க்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.அதனால், எந்த கட்சிக்கு அதிக, எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனரோ, அந்த கட்சிக்கு, ராஜ்யசபாவுக்கு அதிக, எம்.பி.,க்களை அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும்.கடந்த ஆண்டு, ராஜ்யசபாவில், காங்கிரசை விட, அதிகமா,ன எம்.பி.,க்கள் பலத்தை, தே.ஜ., கூட்டணி முதல்முறையாக பெற்றது.இப்போது, தே.ஜ., கூட்டணிக்கு, 101 எம்.பி.,க்கள் உள்ளனர். மேலும், மூன்று சுயேச்சை, எம்.பி.,க்கள் மற்றும் மூன்று நியமன, எம்.பி.,க்கள் ஆதரவு, தே.ஜ., கூட்டணிக்கு உள்ளது. மத்தியில், ஐ.மு., கூட்டணி அரசு இருந்த போது, நியமன, எம்.பி., யாக நியமிக்கப்பட்ட கே.டி. துள்சியின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிகிறது. அதன் பின், ஒரு நியமன, எம்.பி.,யை, மத்திய அரசு நியமிக்கலாம்.அடுத்த ஆண்டு, நவம்பருக்குள், தே.ஜ., கூட்டணிக்கு, உத்தர பிரதேசம், பீஹார், தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, 14 மாநிலங்களிலிருந்து , 19 எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


அதனால், அடுத்த ஆண்டு இறுதியில், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற, தே.ஜ., கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.எனவே, மீதியுள்ள நான்கு ஆண்டு கால ஆட்சியில், அனைத்து மசோதாக்களையும், எந்த வித தடையும் இன்றி, அரசால் நிறைவேற்ற முடியும். 'ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற்ற பின், பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள, பிரதமர் மோடி முயற்சிப்பார்' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.


பெரும்பான்மை போதாது பார்லிமென்ட் விவகாரத்துறை முன்னாள் செயலர், அப்சல் அமனுல்லா கூறியதாவது: ராஜ்யசபாவில், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டும், சபை சுமூகமாக நடக்கும் என்பது உறுதியில்லை.எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக அமளியில் ஈடுபட்டால்தான், சபை நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதிலை. கடந்த ஆண்டுகளில், ஆறு அல்லது ஏழு எம்.பி.,க்கள், ஒரு குழுவாக செயல்பட்டு, சபை நடவடிக்கைளை தடுத்துள்ளனர்.

பெரும்பான்மை பலம் இருந்தாலும், அவையில் சிலரின் அமளியால், மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.சபை நடவடிக்கைகள் பாதிக்க கூடாது என்ற எண்ணம், அனைத்து உறுப்பினர்களிடமும் ஏற்பட வேண்டும்.அப்போது தான், சபை முழுமையாக நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)