புதிய இந்தியாவை உருவாக்கவே மக்கள் ஆதரவு தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் மோடி உணர்ச்சிகரம்

புதுடில்லி:'புதிய இந்தியாவை உருவாக்கவே நமக்கு மக்கள் அமோக வெற்றியை அளித்துள்ளனர்,'' எனபிரதமர் நரேந்திர மோடிபேசினார்.
டில்லியில் நேற்று மாலை நடந்த தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.பின், அவர்பேசியதாவது: புதிய இந்தியாவை உருவாக்க இனிதான துவக்கம் இது. உங்களின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்.என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. அனைவரது ஆலோசனை யையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கு வோம். தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் வாழ்த்துக் கள். முதல்முறையாக தேர்வான எம்.பி.,க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.புதிய இந்தியாவை உருவாக்கவே இந்த தீர்ப்பை மக்கள் நமக்கு அளித்துள்ளனர். யார் சேவை செய்வார்கள் என அறிந்து மக்கள் தேர்வு செய்துள்ளனர். சேவையை தொடரும் போது மக்களின் ஆதரவு தானாகவே கிடைக்கும்.

உலகமே வியந்ததுஇந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுவாழ் இந்தியர்களும் கொண்டாடு கின்றனர். இந்த தேர்தல் உலகத்தையே வியப்படைய வைத்துள்ளது. இது மனங்களை ஒருங்கிணைத்த தேர்தல். அதிகளவில் இந்திய மக்கள் ஓட்டளித்துள்ளனர். பெண்களும் அதிக ளவில் ஓட்டளித்துள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தலை விட 2019 தேர்தலில் 25 சதவீதம் கூடுதலாக ஓட்டுகள் பெற்றுள்ளோம். சுதந்திர இந்தியாவில் அதிக பெண் எம்.பி.,க்கள் இந்த லோக்சபாவில்தான் உள்ளனர்.பல தேர்தல்களில் வெற்றி,தோல்விகளை சந்தித்துள்ளேன். இந்த தேர்தல்தான் எனக்கு ஒரு பாடம். நாடு முழுவதும் பிரசாரம்
மேற்கொள்ளவில்லை; தீர்த்தயாத்திரையே மேற்கொண்டேன். சமரசம் செய்தது இல்லை பிராந்திய நலன், தேசத்தின் எதிர்பார்ப்பு இரண்டி லும் சமரசம் செய்தது இல்லை. விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. தேசத்தின் வளர்ச்சி, மாநில நலன் ஆகியவற்றை நிறை வேற்றும் வகையில் புதிய அரசு செயலாற்றும்.புதிய எம்.பி.,க்கள் புகழுக்காக பணியாற்றாமல் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். சிறுபான்மையினரை வெறும் ஓட்டு வங்கியாகவே எதிர்க்கட்சிகள் கருதிவருகின்றனர். உண்மையில், வளர்ச்சியின் பலனை சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் அனுபவிக்க வேண்டும்.

இதயங்களை இணைத்த தேர்தல்தற்போது நடந்த லோக்சபா தேர்தல் சிறப்பு வாய்ந்தது. அது ஒரு வண்ணமயமான திருவிழா போல் இருந்தது. அதில் வெற்றி இன்னும் இனிமையானது. வழக்கமாக, தேர்தல் என்றால் பிரிவினை இருக்கும்; இடைவெளியை அதிகரிக்கும். பிரிவினை சுவர்களை ஏற்படுத்தும். ஆனால், 2019 லோக்சபா தேர்தல் பிரிவினை சுவர்களை தகர்த்தெறிந்துவிட்டது; இதயங்களை இணைத்துவிட்டது. இதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.

அரசுக்கு ஆதரவான அலைவழக்கமாக தேர்தல்களில் அரசுக்கு எதிரான அலை வீசும். ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ., அரசுக்கு ஆதரவான அலை வீசியது. இதில் அடிப்படை அரசின் மீதான மக்களின் விசுவாசம் மட்டுமல்ல; மக்கள் தங்களுக்குள் காணப்பட்ட நம்பிக்கைதான். நமது புதிய பயணம் மீண்டும் துவங்க உள்ளது. புது சக்தியுடன் புது பயணத்தை துவக்குவோம். நாட்டின் வளர்ச்சிதான் முக்கிய குறிக்கோள். தேசிய எதிர்பார்ப்புகளும், மாநில நலன்களும் மதிக்கப்பட வேண்டும்.இதயங்களை நாம் வெல்ல வேண்டும். எந்த பதவி கிடைத்தாலும், கட்சி உறுப்பினர் என்ற எண்ணம், நம்மில்உயிர்ப்போடு இருக்க வேண்டும். நான் இந்தியாவின் பிரதமராக இருக்கிறேன் எனக் கூறி எனக்கு சிறப்பு சலுகை எதிர்பார்க்கவில்லை. விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்கு வரிசையில் காத்திருக்கவே விரும்புகிறேன்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களுக்கு
நான் சொல்லும் அறிவுரை... நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள் என்பது தான். பொது இடத்தில் பேசும்போது பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள். தேவையற்ற கருத்துக்களை கூறக்கூடாது; நாவடக்கம் அவசியம். ஊடகங்கள், பல்வேறு யூகங்களுடன் உங்களை அணுகலாம். நீங்கள் எது குறித்து கூறினாலும் அது செய்தியே. அதனால் 'ஆப் தி ரெக்கார்டு' என்ற உரையாடல் எதுவும் கிடையாது.

தகுதியிருந்தால் பதவிபுதிய அமைச்சரவையில் யார் இடம்பெற போகின்றனர் என்ற யூகங்களுடன் செய்திகள் வருகின்றன. இதை நம்ப வேண்டாம். நம்பினால் நம்மில் பிரிவினைதான் ஏற்படும். நான் எனது எம்.பி.,க்களிடம் பிரிவினையை விரும்பவில்லை; நான் யாருக்கும் சாதகமாக வும், பாதகமாகவும் இருக்க மாட்டேன். இவை எல்லாம் தகுதிக்கு ஏற்ப, விதிமுறைக்கு ஏற்ப நடப்பவை. நாம் இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளது மக்களால் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

சிறுபான்மையினருக்கு துரோகம்அரசியல் கட்சிகள் தங்களின் சுயலநலனுக்காக இந்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பல ஆண்டுகளாக துரோகம் இழைத்து வந்து உள்ளன. சிறுபான்மையினரை பயமுறுத்தி சிலர் தேர்தலில் பயன்படுத்திக் கொண்டனர். இதனால், அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.


சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை நாம் முழுமையாக பெற வேண்டும். நமக்கு ஓட்டு அளித்தவர்கள், ஓட்டு அளிக்காதவர்கள் என்ற பாகுபாடு கூடாது. ஓட்டு அளித்தவர்களுக்கும், அளிக்காதவர் களுக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம். இவ்வாறுமோடி பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)