மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து

திண்டிவனம்,''பிரதமர் மோடிக்கு, வரலாறு காணாத மிப்பெரிய வெற்றியை இந்திய மக்கள் கொடுத்துள்ளனர்,'' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறினார்.மறைந்த வன்னியர் சங்கத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு நினைவு தினம் நேற்றுஅனுஷ்டிக்கப்பட்டது.இதையொட்டி, திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் உள்ள, அவரது சிலைக்கு, ராமதாஸ், நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.மாநில இளைஞரணி தலைவர், அன்புமணி, மாநிலத் தலைவர், மணி உள்ளிட்டோரும், அஞ்சலி செலுத்தினர். பின், ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:மிகப்பெரும்பான்மையான அளவில், பிரதமர் மோடியை, இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். வரலாறு காணாத மிகப் பெரிய வெற்றியை, அவருக்கு கொடுத்து உள்ளனர்.இரண்டாவது முறையாக பிரதமராகும் அவருக்கு, பா.ம.க., சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, ராமதாஸ் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)