மத்திய அமைச்சர்கள் யார் யார்? மோடி, அமித் ஷா முடிவு

புதுடில்லி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விரைவில் பதவியேற்க உள்ள நிலையில், யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர், அமித் ஷா முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.கூட்டணி கட்சிலோக்சபா தேர்தல் முடிந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மீண்டும், பா.ஜ., அரசு அமைய உள்ளது. வரும், 30ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள போதிலும், கடந்த முறையைப்போல வே, கூட்டணிக் கட்சிகளையும், அமைச்சரவையில் சேர்ப்பதற்கு, பா.ஜ., முடிவு செய்துஉள்ளது. இந்த முறை அதிக தொகுதிகளில் வென்ற, மேற்கு வங்கம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அமைச்சரவையில் இடம்பெறுவர். பபுல் சுப்ரியோ மற்றும் எஸ்.எஸ்.அலுவாலியா மத்திய அமைச்சர்களாக இருந்தனர். தற்போது, 18 தொகுதிகளில் வென்றுள்ளதால், இந்த இருவரைத் தவிர, மேலும் இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஒடிசாவைச் சேர்ந்த ஜுவல் ஓரம் தற்போது அமைச்சராக உள்ளார். அந்த மாநிலத்தில், எட்டு இடங்களில் வென்றுள்ளதால், கட்சியின் தேசியச் செயலர் சுரேஷ் புஜாரி, அபராஜிதா சாரங்கி ஆகியோர், மத்திய அமைச்சராவர் என, பரவலாக பேசப்படுகிறது.அதேபோல், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.இளம் வயதினரும் இந்த அமைச்சரவையில் அதிகம் இடம் பெறுவர் என, பேசப்படுகிறது.டில்லியைச் சேர்ந்த, மீனாட்சி லேகி, ஹிமாச்சலைச் சேர்ந்த அனுராக் தாக்குர், பட்டியலில்முதலிடத்தில் உள்ளனர்.எதிர்பார்ப்புகூட்டணி கட்சிகளைப் பொருத்தவரை, பீஹார் முதல்வர், நிதிஷ் குமாரின், ஐக்கிய ஜனதா தளம்,கவுரவிக்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர்பதவியை, இந்தக் கட்சி எதிர்பார்க்கிறது.லோக் ஜனசக்தி கட்சியைப் பொருத்தவரை, ராம்விலாஸ் பஸ்வான் அமைச்சராக தொடரு வாரா அல்லது அவருடைய மகன் சிராக் பஸ்வானுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அப்னா தளத்தின், அனுபிரியா படேல், மத்திய அமைச்சராக தொடருவார்.மஹாராஷ்டிராவில் இந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான, சிவசேனா, மூன்று கேபினட் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறது. இரண்டு கேபினட் மற்றும் ஒரு இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம் என, பேசப்படுகிறது.ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவர், அமித் ஷா, யார் யாருக்கு அமைச்சர் பதவி தருவது என்பது குறித்து, ஏற்கனவே இறுதி செய்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)