'தவறு செய்த சந்திரபாபுவை கடவுள் தண்டித்துவிட்டார்'

விஜயவாடா, 'தவறு செய்த சந்திரபாபு நாயுடுவை, கடவுள் தண்டித்து விட்டார்' என, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.ஆந்திர சட்டசபை தேர்தல், சமீபத்தில் நடைபெற்றது. மொத்தமுள்ள, 175 தொகுதிகளில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்., 151 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, தோல்வியை தழுவியது.ஒருமனதாக தேர்வுஇந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்., காங்., சார்பில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், விஜயவாடாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது.இதில், ஜெகன்மோகன் ரெட்டி, சட்டசபை தலைவராக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து, நேற்று மாலை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா கவர்னர், நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.வரும், 30ல், விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி அரங்கத்தில், ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இன்று, டில்லி செல்லும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.சட்டவிரோதம்இந்நிலையில், செய்தி யாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு பின், ஒய்.எஸ்.ஆர்., காங்.,கின், மூன்று, எம்.பி.,க்களை, சந்திரபாபு நாயுடு, சட்டவிரோதமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இந்த தேர்தலில், அவர் கட்சி சார்பில், மூன்று பேர் மட்டுமே, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த, 2014 ஆந்திர சட்டசபை தேர்தல் முடிவடைந்த பின், ஒய்.எஸ்.ஆர்., காங்.,கின், 23 எம்.எல்.ஏ.,க்களை, சந்திரபாபு நாயுடு விலைக்கு வாங்கினார். இந்த சட்டசபை தேர்தலில், அவர் கட்சியில் இருந்து, 23 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அந்த முடிவுகள், மே, 23ல் வெளியாகின.நியாயமான தீர்ப்புதவறான வழிகளில் வெற்றி அடைபவர்களுக்கு, கடவுள் பாடம் கற்பிப்பார். 23 என்ற எண்ணை கொண்டு, அழகான, நியாயமான தீர்ப்பை கடவுள் எழுதி உள்ளார். தவறு செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு, கடவுள் கொடுத்த தண்டனை இது.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)