நீலகிரி,: நீலகிரி லோக்சபா தொகுதியில், 'நோட்டா' வுக்கு, 18 ஆயிரம் ஓட்டுகள் விழுந்து உள்ளன.நீலகிரி லோக்சபா தொகுதியில், 2014 லோக்சபா தேர்தலில், 9 லட்சத்து, 33 ஆயிரத்து, 493 பேர் வாக்களித்தனர். இதில், 46 ஆயிரத்து 559 பேர், 'நோட்டா'வுக்கு போட்டு தள்ளினர். அதாவது, மொத்தம் பதிவான வாக்குகளில், 6 சதவீதம் பேர், நோட்டாவை தேர்வு செய்து வாக்களித்தது, தேசிய அளவில், நீலகிரியை முதலிடம் பிடிக்கச் செய்தது.தற்போது, முடிவு வெளியாகியுள்ள லோக்சபா தேர்தலில், 'நோட்டா'வுக்கு, 18, ஆயிரத்து, 39 ஓட்டுகள் விழுந்துள்ளன. கடந்த முறையை விட, இம்முறை, 'நோட்டா'வுக்கான ஓட்டுகள் குறைந்துள்ளன.
வாசகர் கருத்து