உ.பி., லோக்சபா தேர்தலில் காணாமல் போன நட்சத்திரங்கள்

லக்னோ: உத்தர பிரதேச லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட சினிமா நட்சத்திரங்களில், பா.ஜ.,வைச் சேர்ந்த ஹேமமாலினி மற்றும் போஜ்புரி நடிகர் ரவி கிஷண் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர். ஜெயப்ரதா, ராஜ் பாபர் உள்ளிட்ட நட்சத்திரங்கள், தோல்வியை தழுவியுள்ளனர்.உ.பி., லோக்சபா தொகுதியில் உள்ள, 80 இடங்களில், பா.ஜ., - அப்னா தள கூட்டணி, 64 இடங்களிலும்; சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி, 15 இடங்களிலும்; காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.'பாலிவுட்' நடிகை ஹேமமாலினி, பா.ஜ., சார்பில், மதுரா தொகுதியில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட, ராஷ்ட்ரீய லோக் தள வேட்பாளர், குன்வர் நரேந்திர சிங்கை விட, 3 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று, ஹேமமாலினி வெற்றி பெற்றார்.போஜ்புரி மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ரவி கிஷண், காங்.,கில் இருந்து, சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்தார்.இவருக்கு, உ.பி.,யின் கோரக்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, பா.ஜ., தலைமை வாய்ப்பளித்தது.
இதையடுத்து, இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ராம் புவல் நிஷாத்தை விட, 3 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, ரவி கிஷண் வெற்றி பெற்றார்.பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, பாலிவுட் நடிகை ஜெயப்ரதா மற்றும் போஜ்புரி நடிகர் தினேஷ் யாதவ் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.உ.பி., மாநில, காங்., தலைவரும், பிரபல பாலிவுட் நடிகருமான ராஜ் பாபர், பதேபூர் சிக்ரி லோக்சபா தொகுதி யில் போட்டியிட்டார். இங்கு, பா.ஜ., வேட்பாளர் ராஜ்குமார் சஹாரிடம், 4.9 லட்சம் ஓட்டு கள் வித்தியாசத்தில், ராஜ் பாபர் படுதோல்வி அடைந்தார்.

உ.பி.,யில், காங்., சார்பில், ரேபரேலி தொகுதி யில் போட்டியிட்ட சோனியா மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தன் மாநில, காங்., தலைவர் பதவியை, நடிகர் ராஜ் பாபர் ராஜினாமா செய்தார். தன் ராஜினாமா கடிதத்தை, காங்., தலைவர் ராகுலுக்கு அனுப்பி வைத்தார்.'பாலிவுட்' நடிகரும், காங்.,கைச் சேர்ந்தவருமான சத்ருகன் சின்ஹாவின் மனைவி யும், நடிகையுமான பூனம் சின்ஹா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)