லக்னோ, : உத்தர பிரதேச லோக்சபா தேர்தலில், அம்மாநிலத்தைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, காலியாகி இருக்கும் அத்தொகுதிகளில், விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர்.சமாஜ்வாதி கட்சியில் இருந்து இருவரும், பகுஜன் சமாஜ் மற்றும் அப்னா தளம் கட்சியில் இருந்து தலா, ஒரு எம்.எல்.ஏ.,வும், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர்.மொத்தம் போட்டியிட்ட, 13 எம்.எல்.ஏ.,க்களில், அம்பேத்கர் நகர் தொகுதியில் போட்டியிட்ட, பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா தோல்வி அடைந்தார்.மேலும், பிரோஸாபாத் தொகுதியில் போட்டியிட்ட பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், முலாயம் சிங் யாதவின் சகோதரருமான, ஷிவ்பால் சிங் யாதவும் தோல்வி அடைந்தார்.இந்நிலையில், 11 பேர், வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து, அந்த, 11 சட்டசபை தொகுதிகளும் காலியாகி உள்ளன. எனவே, அத்தொகுதிகளுக்கு, ஆறு மாதத்திற்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
வாசகர் கருத்து