பா.ம.க.,வை, 'ரவுண்ட்' கட்டும், 'மீம்ஸ்'

அ.தி.மு.க., கூட்டணி யில், ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட, பா.ம.க., ஒன்றில் கூட வெற்றி பெறாததால், அக்கட்சி இளைஞரணி தலைவர், அன்புமணியை விமர்சித்து, சமூக வலைதளங்களில், கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
விமர்சனம்
பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், இளைஞரணி தலைவர், அன்புமணி ஆகியோர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தனர்.இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வுடன், பா.ம.க., கூட்டணி சேர்ந்தது. அக்கட்சிக்கு, ஏழு லோக்சபா தொகுதிகளும்; ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., தலைவர்களை விமர்சித்த நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததை அடுத்து, ராமதாஸ், அன்புமணியை விமர்சித்து, பலரும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். குறிப்பாக, இருவரும், அ.தி.மு.க.,வினரை விமர்சித்து பேசிய, 'வீடியோ' பதிவுகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.இதையடுத்து, கூட்டணியில் இணைந்ததற்கான காரணங்களை, ராமதாஸ், அன்புமணி ஆகியோர், கட்சியினரிடமும், வாக்காளர்களிடமும் விளக்கினர். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உதவியுடன், சமூக வலைதளங்களில், தங்களுக்கு எதிரான, கருத்துகள், 'மீம்ஸ்'களையும் அகற்றினர்.
சமூக வலைதளம்
இதனால், பா.ம.க., மீதான விமர்சனம் குறைந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், பா.ம.க., போட்டியிட்ட, ஏழு தொகுதிகளில், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக, தர்மபுரியில் போட்டியிட்ட அன்பு மணி, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார்.இதையடுத்து, அன்புமணி, ராமதாசை விமர்சித்து, மீண்டும், சமூக வலைதளங்களில், பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)