புதுடில்லி: லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து டில்லியில் இன்று (மே 25) கூடிய காங்., காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் ராகுல் ராஜினாமா செய்வதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால் வழக்கம் போல் இதனை காங்., மூத்த நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். குறிப்பாக தென் மாநில தலைவர்கள் ராகுல் ராஜினாமாவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து டில்லியில் காங்., காரிய கமிட்டி அவசர கூட்டம் இன்று கூடியது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., 303 தொகுகளில் வெற்றி பெற்றது. நாங்களே ஆட்சி அமைப்போம் என கூறி வந்த காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. பெரும் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர், சபாநாயகர்
காங்., தலைவர் ராகுல் ராஜினாமா செய்வாரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் தோல்வி காரணங்கள் குறித்து ஆராய காங்., கட்சியின் காரிய கமிட்டி இன்று காலை டில்லியில் கூடியது. காங்., மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோன்சிங், காங்., மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா, குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன் கார்கே, ப.சிதம்பரம், அசோக் கெலாட், அகம்மது பட்டேல் , முன்னாள் சபாநாயகர் மீராகுமார், சித்தராமயைா, அமரீந்தர்சிங், ஷீலா தீட்ஷித், ஜோதி ராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் நடப்பதற்கு முன்னர் சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தினர்.
ராகுல் நீடிப்பார்: காங்., தீர்மானம்
கூட்டத்தின் முடிவில் காங்.,தலைவராக ராகுல் நீடிப்பார் என்றும், கட்சியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்கு முழு அதிகாரம் வழங்குவதாகவும் காங்., காரியக்கமிட்டி குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து