இன்று திமுக - எம்.பி., எம்.எல்.ஏ., கூட்டம்

சென்னை: வெற்றி பெற்ற, தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று(மே 25) மாலை, சென்னை, அறிவாலயத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 37 தொகுதிகளில், அமோக வெற்றி பெற்றுள்ளது. அதில், தி.மு.க., சார்பில், 19 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், 22 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், 13 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களின் முதல் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு, கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடக்கிறது. அதில், லோக்சபாவில், புதிய எம்.பி.,க்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்தும், சட்டசபை மற்றும் தொகுதிகளில், எம்.எல்.ஏ.,க்களின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)