கிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட ம.நீ.ம

மதுரை : வளர்ந்த நகரங்களில் தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு அடுத்தப்படியாக அதிக ஓட்டுகளை அள்ளிய கமலின் மக்கள் நீதி மய்யம், கிராமப்புறங்களில் சறுக்கி உள்ளது.

முதல் தேர்தலை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் ஒரு லோக்சபா தொகுதியை கூட கைப்பற்றவில்லை. ஆனால் 15 லட்சத்து 75 ஆயிரத்து 620 ஓட்டுகளை பெற்று, முதல் தேர்தலிலேயே 3.71 சதவீதம் ஓட்டுகளை வசப்படுத்தி உள்ளது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதுார், திருப்பூர், மதுரை உட்பட 13 லோக்சபா தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடத்தை தனதாக்கி உள்ளது.போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோய் இருந்தாலும் கூட, அக்கட்சி பெற்ற ஓட்டு விகிதம் நல்ல துவக்கத்தை தந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக ஒரு கட்சியை விரும்பியவர்கள், புதிய வாக்காளர்கள் ஓட்டுகளின் பெரும்பகுதியை கமல் அறுவடை செய்துள்ளார்.வடசென்னையில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 167, தென்சென்னையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465, கோவையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 525 ஓட்டுகளை மக்கள் நீதிமய்யம் வேட்டையாடி உள்ளது.

மத்திய சென்னை (92,249), மதுரை (85,048), திருவள்ளூர் (73,731), திருப்பூர் (64,657) தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன.அதாவது சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களில் கமலுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. ஆனால் கிராமப்புற மக்களின் ஓட்டுகளை ஈர்ப்பதில் பெரிய அளவில் கமல் வெற்றிபெறவில்லை. அவரது பிரசாரமும், அணுகுமுறையும் கிராம மக்களிடம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)