அ.தி.மு.க., ஓட்டு, 18.5 சதவீதமாக சரிவு!

தமிழகத்தில் நடந்த தேர்தல்களில், இதுவரை இல்லாத அளவிற்கு, அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க.,விற்கு ஓட்டு வங்கி அதிகம். ஜெய லலிதா இருந்தபோது, 1.50 கோடி பேர், அ.தி.மு. க.,வில் உறுப்பினர்களாக இருந்தனர். புதிய பதவிஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச் செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.


ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்., ஆகியோர் பொறுப்பேற்றனர்.கட்சியிலிருந்து வெளியேறிய, தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கினார். சசிகலா ஆதரவாளர்கள், அவர் பக்கம் சென்றனர். இரட்டை தலைமை காரணமாக, அ.தி.மு.க., வில், அதிரடி முடிவு களை எடுக்க முடியவில்லை. அமைச்சர்கள், தன்னிச்சையாக செயல்படத் துவங்கினர். இதனால், ஒன்றரை கோடி உறுப்பினர் எண்ணிக்கை, ஒரு கோடிக்கும் குறைவாக சரிந்தது. இது, தேர்தலிலும் எதிரொலித்து உள்ளது.

அ.தி.மு.க., தரப்பில், இம்முறை பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் - புதிய நீதிக்கட்சி- த.மா.கா., - என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து, மெகா கூட்டணி அமைக்கப் பட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள, ஓட்டு வங்கி அடிப்படையில், இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பினர்.


ஆனால், கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளும், தங்கள் ஓட்டு வங்கியை இழந்தது தான் மிச்சம்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது, அக்கட்சி, 44.34 சதவீத ஓட்டுகளைப் பெற்றது.

தனித்து போட்டிகடந்த, 2016 சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தது. அப்போது ஓட்டு சதவீதம், 40.8 சதவீத மாக குறைந்தது.இந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 22 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள், 17 இடங்களிலும் போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க., மட்டும், ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகள், அனைத்து இடங்களிலும், தோல்வியை தழுவின.இந்த தேர்தலில், அ.தி.மு.க., மொத்தம், 75.80 லட்சம் ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது. அதன் ஓட்டு சதவீதம், 18.5 ஆக குறைந்துள்ளது. தி.மு.க., 2014 லோக்சபா தேர்தலில், 23.61 சதவீத ஓட்டு களையும், 2016 சட்டசபை தேர்தலில், 31.6 சதவீத ஓட்டுகளையும் பெற்றது. இந்த தேர்தலில், 1.38 கோடி ஓட்டுகளை பெற்றுள்ளது. அதன் ஓட்டு சதவீதம், 32.8 ஆகஅதிகரித்துள்ளது.அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளான, பா.ஜ., 2016 சட்டசபை தேர்தலில், 2.8 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இம்முறை, 3.66 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. பா.ம.க., 2016 சட்டசபை தேர்தலில், 5.3 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இந்த தேர்தலில்,
5.42 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. தே.மு. தி.க., ஓட்டு சதவீதம், 2.4ல் இருந்து, 2.19 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் ஓட்டு சதவீதம், 6.4ல் இருந்து, 12.76 ஆக அதிகரித்துள்ளது.

காரணம் என்ன?அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்ததற்கு, ஆட்சி மீதுள்ள அதிருப்தி மட்டும் காரணமா அல்லது புதிய கட்சிகள் வரவு காரணமா என்ற, விவாதம் நடந்து வருகிறது. அ.தி.மு.க.,வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், புதிதாக துவக்கிய, அ.ம.மு.க., 21 லட்சம் ஓட்டுகள், அதாவது, 5 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றுஉள்ளது.

பங்குஅதேபோல், நடிகர் கமலின்,மக்கள் நீதி மையம், முதல் முறையாக போட்டியிட்டு, 15.98 லட்சம் ஓட்டுகளை, அதாவது, 3.80 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. சீமானின், நாம் தமிழர் கட்சி, 2016 சட்டசபை தேர்தலில், 4.57 லட்சம் ஓட்டுகளை மட்டும் பெற்றது. இந்த தேர்தலில், 16.45 லட்சம் ஓட்டுகளை, அதாவது, 3.87 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை, இக்கட்சிகள் பங்கு போட்டதாக கூறப்படுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)