சென்னை:''நேர்மைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்; தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், கமல் கூறினார்.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தின், 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட, கமல் தலைமையிலான மக்கள் நீதி மையம், ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், பல தொகுதியில், மூன்று, நான்காவது இடங் களை பிடித்துள்ளது. மொத்தம், 15 லட்சத்திற் கும் மேலான ஓட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டை யில் உள்ள அலுவலகத்தில், மக்கள் நீதி மையம் தலைவர், கமல்
அளித்த பேட்டி:வெற்றி
பெற்ற அரசியல் கட்சிகளுக்கு, என் மனமார்ந்த
வாழ்த்துக்கள். பிரதமராக பொறுப்பேற்கும் மோடிக்கும், அரசியல் மாண்பின் படி
வாழ்த்து கூறுகிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட, கணிசமாக ஓட்டுக்கள்
கிடைத்துள்ளன.
நேர் வழியில் சென்றால், ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை, மக்கள் தந்துள்ளனர். 14 மாத குழந்தையை நடக்கவும், ஓடவும் வைத்துள்ளனர். 14 மாதங்களில், எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை வெற்றிகரமாக செய்துள்ளோம். இந்த தேர்தல் வாயிலாக, எங்கள் பயணம் நீண்டது என்பதையும், வறுமையை வெல்வது கடினம் என்பதையும் கற்றுக் கொண்டோம்.
பணப்புயலுக்கு நடுவே, இந்த அளவு இலக்கை
தொட்டது பெரிய விஷயம். நாங்கள் பா.ஜ., வின், 'பி டீம்' இல்லை என்பது
புரிந்திருக்கும்; நாங்கள், 'ஏ டீம்' என்பதே உண்மை.பா.ஜ.,வின் வெற்றி
என்பது, மக்கள் அளித்த தீர்ப்பு; அது, தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல
என்பதில் எனக்கு சந்தோஷம். மக்களின் ஏழ்மையால் தான், தவறானவர்கள்வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருப்பது, வெற்றி பெற்ற அரசின் கடமை. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக, தமிழத்தையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதிய தொழிற்சாலைகள், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை நாங்கள் வேண்டாம் என, சொல்லவில்லை. விவசாயத்தை அழித்து, தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா என, பார்க்க வேண்டும்.
மக்களிடம் எழுச்சியை உருவாக்குவது தான் எங்கள் இலக்கு. இதன் நடுவே, தேர்தல் வரும் போகும். தமிழகத்தை, முன்னோடி மாநிலமாக உருவாக்குவதே எங்கள் பணி.அரசியலை தொழிலாக நினைப்பது தவறு.
என் தொழில் சினிமா; நேர்மையாக பணம் சம்பாதிக்க சினிமாவில் இருக்கிறேன். இன்று, மூன்றாவது இடத்தில் நாங்கள் வராமல் இருந்தால், அதற்கான பணிகளில் இன்னும் தீவிரமாக பணியாற்றுவோம்.இவ்வாறு, கமல் கூறினார்.
வாசகர் கருத்து