தாமரை மலர்ந்தது; கணிப்பு பொய்த்தது

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பா.ஜ., வட கிழக்கு மாநிலங்களிலும், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளது.

இந்தாண்டு துவக்கத்தில், மத்திய அரசு, அன்னிய குடியேற்றச் சட்டத் திருத்த மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றியது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, வட கிழக்கு மாநிலங்களில் குடியேறிய, ஹிந்து, சீக்கியம், கிறிஸ்துவம், புத்தம், ஜைனம், பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு, குடியுரிமை வழங்க, இந்த மசோதா வகை செய்கிறது.இதை எதிர்த்து, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில்,
மண்ணின் மைந்தர்கள் நடத்திய போராட்டங்கள், வன்முறையில் முடிந்தன.

அதனால், லோக்சபா தேர்தலில், வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியைத் தழுவும் என,எதிர்பார்க்கப்பட்டது. மத்திய அரசும், மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்றதீவிரம் காட்டவில்லை.இந்நிலையில், வட கிழக்கு மாநிலங்களில், 25 லோக்சபா தொகுதி களில், 18 இடங்களை, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் நான்கு இடங்களை யும், அதன் கூட்டணி கட்சிகள் இரண்டு இடங்களை யும் பிடித்துள்ளன; ஒரு இடத்தில், சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.


அசாமில், பா.ஜ., தனித்து, ஒன்பது இடங்களை வென்றுள்ளது. கடந்த தேர்தலில், ஏழு இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்.,கடந்த முறையும், தற்போதும், மூன்று இடங்களை வென்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், பா.ஜ., இரு இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்திய இணை அமைச்சர், கிரன் ரிஜிஜு, தபிர் காவோ வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில், காங்கிரஸ் வசமிருந்த 2 இடங்களை, பா.ஜ., மற்றும் நாகா மக்கள் கூட்டணி கைப் பற்றி உள்ளது. திரிபுராவிலும், இரு தொகுதிகள், பா.ஜ., வசம் வந்துள்ளன. சிக்கிமில், பா.ஜ., கூட்டணியைச் சேர்ந்த, சிக்கிம், கிரந்திகாரி மோர்ச்சா, ஒரு இடத்தை வென்றுள்ளது.


மிசோரமில்,காங்., வசம் இருந்த ஒரு தொகுதியை, பா.ஜ., கைப்பற்றியுள்ளது. குடியேற்றச் சட்டத் திருத்தம், பா.ஜ.,வுக்கு பலத்த அடியை கொடுக்கும் என, எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு மாறாக, பெருவாரி இடங்களை, பா.ஜ., கைப்பற்றி. வட கிழக்கிலும், அதன் தாமரை சின்னத்தை மலரச் செய்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)