தமிழக கட்சிகளின் 'ரேங்க் கார்டு'

சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தல்களில் தமிழகத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகள் பெற்ற ஓட்டுகளும், அவற்றின் சதவீதமும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க., தலைமையில், பா.ம.க., பா.ஜ., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் 'மெகா கூட்டணி' அமைக்கப்பட்டு, லோக்சபா தேர்தலை எதிர்கொண்டனர். இதில், வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக : 30.28%
நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே, 23 லட்சத்தி 66 ஆயிரத்தி 721 ஓட்டுகள் பதிவாகின. இது மொத்த வாக்குகளில் 72.01 சதவீதமாகும். இதில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி மொத்தம், 1 கோடியே 28 லட்சத்தி 30 ஆயிரத்தி 314 ஓட்டுக்களை பெற்றுள்ளது. 38 எம்.பி.,சீட்டுகளில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. இக்கூட்டணி பெற்ற ஓட்டு 30.28 சதவீதம் ஆகும்.

திமுக ; 52.64%
தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூ., இ.கம்யூ., மற்றும் கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இக்கூட்டணி மொத்தம் 2 கோடியே, 23 லட்சத்தி, 3 ஆயிரத்தி 110 ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது 52.64 சதவீதமாகும்.

ம.நீ.ம. : 3.72%
இதேபோல், தினகரன் தலைமையிலான அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ., கூட்டணி மொத்தம் 22 லட்சத்தி 25 ஆயிரத்தி 377 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. இந்த ஓட்டுகள் 5.25 சதவீதமாகும். அதேபோல, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 16 லட்சத்தி 45 ஆயிரத்தி 185 ஓட்டுகள் பெற்றது. இது, 3.88 சதவீதமாகும். நடிகர் கமல் தலைமையிலான மக்கள் நீதி மையம் மொத்தமாக 15 லட்சத்தி 75 ஆயிரத்தி 620 ஓட்டுக்கள் பெற்றது. இது, 3.72 சதவீதமாகும்.

நோட்டா ; 1.28%
இந்த கூட்டணிகள் மற்றும் கட்சிகள் தவிர, நோட்டாவுக்கு 5 லட்சத்தி 41 ஆயிரத்தி 150 ஓட்டுகள் விழுந்துள்ளன. இதன் மூலம் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று 1.28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)