எதிர்க்கட்சிகளை மோடி வீழ்த்திய பின்னணி

புதுடில்லி : எதிரிகளே இல்லை ரீதியில் லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ., வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி கூறியது, நிலையான ஆட்சி, அதீத தேசியவாதம், அசைக்க முடியாத பெரும்பான்மை என்பது தான். குஜராத் முதல்வராக இருந்தது முதல் மத்திய அரசிலுக்கு தான் வந்தது வரை செய்தவற்றை முன்வைத்து, மிகப் பெரிய தலைவராக தன்னை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டார்.

வெறுப்பு அரசியல் :

அதே சமயம் எதிர்கட்சிகளோ மோடிக்கு எதிராக வெறுப்பு அரசியலை முன்வைத்தன. மோடியை திருடன் என்ற அடைமொழி கொடுத்து, அடையாளப்படுத்தியதுடன், அவர் இந்தியாவிற்கு செய்தது என்ன? அவரது தலைமையில் நாடு அடைந்த வளர்ச்சி என்ன? என கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு வாக்காளர்களிடம் தெளிவான பதில்கள் இல்லை. இருப்பினும் எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் சாதகமாக விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தவறி விட்டன.

மோடியின் பிரசாரத்தில் இடம்பெற்ற பா.ஜ.,வுக்கு சாதகமான விஷயங்களை தகர்க்கவும் எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. பிரசாரம் துவக்கியது முதலே தங்களுக்கு ஒற்றுமையின்மை, குழப்பம், தோல்வி பயம் ஆகியவற்றை மட்டுமே எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தி வந்தன. எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்க துடித்த காங்., உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட கூட பயந்தன.

கூட்டணியை நம்பிய காங் :
காங்., தனது சொந்த பலத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையின்றி தேர்தலில் போட்டியிட்டது. தமிழகம், உ.பி.,டில்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைக்க கடுமையாக போராடியது. கடும் முயற்சிக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி உறுதியானது. உ.பி., மேற்குவங்கம், டில்லி போன்ற மாநிலங்களில் எவ்வளவு முயன்றும் காங்., கால் கூட்டணி அமைக்க முடியவில்லை. இதனால் வாக்காளர்கள் கட்சியின் பலத்தை எடை போட்டதில் காங்.,ஐ பலமான கட்சியாக ஏற்க முடியாமல் போனது.

ஆனால் பா.ஜ., முழு நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டது. கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டதுடன், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லப்பட்ட சில பகுதிகளில் அதிக அளவில் மோடிக்காக மக்கள் கூட்டம் கூடியது, மற்ற கட்சிகளுடன் மோடியை ஒப்பிட முடியாத அளவிற்கு செல்வாக்கு உயர்ந்தது.

ராகுலை ஏற்காத மக்கள் :சில இடங்களில் மோடிக்கு பதில் ராகுலை பிரதமராக்க வேண்டும் என சில கட்சிகள் செய்த பிரசாரம் எடுபடவில்லை. மோடிக்கு பதில் ராகுல் என்ற முழக்கம் பல இடங்களில் நகைப்புக்குரியதாக்கப்பட்டது. மோடியை வெற்றி பெற செய்ய விடமாட்டோம் என ராகுல் ஆக்ரோசமாக பல மேடைகளில் பேசியதும், மோடியை நாட்டிற்கு எதிரானவராக காட்ட முயற்சித்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவகாரத்தில் பல பிரச்னைகளை கிளப்பியதும் எதிர்க்கட்சி மீதான நம்பத்தன்மை மக்களிடையே சரிய காரணமாக அமைந்தது.

உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் காங்.,ஐ ஒரு பொறுட்டாகவே மற்ற கட்சிகள் கருதவில்லை. காங்.,ஐ பொறுத்தவரை வடக்கில் லாலு பிரசாத்தின் ராஜ்டிரிய ஜனதா தளம் மட்டுமே நிலையான கூட்டணி கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் லாலுவும் தற்போது சிறையில் உள்ளதால் அவரது மகன் தேஜஸ்வி யாதவ், ராகுலை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. வேலையின்மை, ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்டவற்றையும், மோடியை கடுமையாக விமர்சிப்பதிலுமே காங்., கவனம் செலுத்தியது. மோடியின் வாக்குறுதிகளை உடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் பல கிராமப்புற பகுதிகளில் தங்களின் பிரச்னையை தீர்க்க மோடியை தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் முடியாது என்ற மனநிலை மக்களிடம் உருவானது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)