தவறான பிரசாரத்தால் திமுக வெற்றி: அமைச்சர்

சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவாரா? வாக்காளர்களால் ஏற்று கொள்ள முடியாத நபர் தினகரன். திமுக பெற்ற வெற்றியால் எந்த பலனும் இல்லை. ஸ்டாலின் முதல்வர் கனவு எப்போதும் பலிக்காது என்பதற்கு சட்டசபையில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் திமுகவினர் செய்த தவறான பிரசாரம் எடுபட்டுவிட்டது. இதனால், அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து மக்களை சந்தித்து 2021க்கு பிறகும் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். இனிவரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். கொள்கை முடிவு என்பதால், பா.ஜ.,வுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)