அரசியலை தொழிலாக நினைக்க கூடாது : கமல்

சென்னை : அரசியல் எங்கள் தொழில் அல்ல ; அரசியலை தொழிலாக நினைப்பது தவறு என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அயர்ச்சி இல்லை :சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' நேர்மையான முறையில் ஓட்டுக்களை குவித்த எங்கள் வேட்பாளர்கள், நாளைய வெற்றி வேட்பாளர்கள். இது நாளைய வெற்றிக்கான அற்புதமான ஒத்திகை. மக்களது அரவணைப்புக்கு நன்றி. தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றமில்லை. 13 வருடங்கள் வனவாசத்தில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் 14 மாதங்களில் தான் இந்த தீர்ப்பை பெற்றுள்ளோம். எனவே, எங்களுக்கு எந்தவித அயர்ச்சியும் இல்லை.
இந்திய மக்களிடம் தக்க வைக்கப்பட்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட ஏழ்மை தான் இன்றும் தவறானவர்கள் வெற்றியடைய காரணம். நாங்கள் எந்தக் கட்சியிலிருந்தும் உடைத்துக்கொண்டோ, கிழித்துக்கொண்டோ வந்தவர்கள் அல்ல. நாங்கள் கற்றுக்கொண்ட பாடம், இந்தப் பயணம் நீண்டது என்பது தான்.

நேர்மைக்கு 'ஏ டீம்' :பணப்புயலுக்கு நடுவே இத்தனை ஓட்டுகளை பெற்றுள்ளோம். நாங்கள் யாருக்கும் 'பி' டீம் அல்ல. நேர்மைக்கு நாங்கள் தான் 'ஏ டீம்'. நாங்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை வேண்டவே வேண்டாம் என்று சொல்பவர்கள் அல்ல. ஆனால், விவசாயம் கெட்டுப்போகாத நிலங்களில் கொண்டு வாருங்கள். நாங்கள் புழங்கும் இடத்தை நீங்கள் அசிங்கப்படுத்தாதீர்கள் என்கிறோம்,'' என்றார்.
மேலும் பேசிய கமல், ''தமிழக மக்களிடம் எழுச்சியை உருவாக்குதுதான் எங்கள் இலக்கு. அரசியலை தொழிலாக நினைப்பது தவறு. எங்களுக்கு அரசியல் தொழில் அல்ல,'' என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)