நல்லாட்சி தருவார் மோடி: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, 'நல்லாட்சி தருவார்' என பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து ஸ்டாலின் 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:தலைவணக்கம் தமிழகமே. லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். ஜனநாயக முறைப்படி பிரதமர் மோடி நல்லாட்சியை நடத்துவார் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் காலையில் இருந்து மாலை வரை தி.மு.க. தொண்டர்கள் ஏராளமாக கூடியிருந்தனர். அவர்களை சந்திக்க மாலையில் ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். அப்போது ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.தொண்டர்களின் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க. வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி. மிகப்பெரிய வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி.தேர்தல் களத்தில் இறங்கியபோது நாம் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கருணாநிதி பார்க்கவில்லையே என்ற வருத்தம் உள்ளது. இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியை கண்டு ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்து விடுமோ என கருதி சதிவலை பின்ன திட்டமிட்டுள்ளனர். அத்திட்டத்தை முறியடிக்க தலைமை நிலைய நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.ஸ்டாலின் பேசியபோது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் 'முதல்வர் ஸ்டாலின் வாழ்க' என கோஷம் எழுப்பினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)