2014 தோல்வியை ஈடுசெய்த ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் 2014 லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரோடு இருந்தபோதும் வேட்பாளர்கள் தேர்வு பிரசாரம் போன்றவற்றில் அக்கட்சியின் பொருளாளராக இருந்த ஸ்டாலின் முக்கிய பங்காற்றினார்.இதனால் அதிருப்தி அடைந்த கருணாநிதியின் மூத்த மகனும் 'மாஜி' மத்திய அமைச்சருமான அழகிரி 'தி.மு.க. தோல்வி அடைந்தால் ஸ்டாலின் தான் காரணம்' என கூறினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்தும்; பா.ஜ. தலைமையில் பா.ம.க. - தே.மு.தி.க. உள்ளிட்ட சிறு கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.இறுதியில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பா.ம.க. தர்மபுரி தொகுதியிலும்; பா.ஜ. கன்னியாகுமரியிலும் வென்றன. தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.இந்நிலையில் கருணாநிதி இல்லாத நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.மேலும் ஒட்டு மொத்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி என 39 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 38 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால் 2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்வியை தற்போது கிடைத்திருக்கும் வெற்றியால் ஸ்டாலின் ஈடுசெய்து உள்ளதாக தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)