சபரிமலை விவகாரத்தில் சறுக்கிய கம்யூ., ஓட்டுக்களை அறுவடை செய்த காங்.,

திருவனந்தபுரம், சபரிமலை விவகாரத்தில், பினராயி விஜயன் தலைமையிலான கம்யூ., அரசு மேற்கொண்ட கெடுபிடி நடவடிக்கைகள், கட்சிக்கு தேர்தலில் பலத்த அடியை தந்துள்ளது.கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில்அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில், ஆளும் மார்க்சிஸ்ட் அரசு கடுமையான கெடுபிடிகளை பின்பற்றியது. உத்தரவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.இருமுடி கட்டுகளுடன் சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிச சிந்தனை கொண்ட சில பெண்களை போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு அனுப்பி வைத்து, இந்து ஆசார நடைமுறைகளுக்கு எதிராக அரசு செயல்பட்டது. சபரிமலை சம்பிரதாயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்திலும், 'வனிதா மதில்' என்ற பெயரில் பெண்களின் மனித சங்கிலியை அரசே அமைத்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.சபரிமலை தீர்ப்புக்கு எதிராக, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிர போராட்டங்களில் இறங்கின. 'அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்' என முதலில் கருத்து தெரிவித்த காங்கிரசும், மக்களின் ஏகோபித்த போராட்டங்களை பார்த்த பின், தனதுகொள்கையை மாற்றிக் கொண்டது.சபரிமலை போராட்டம்வலுவடைந்ததால், அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசியது. முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக, அவரது கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. இந்த போராட்டத்தின் பலனை காங்கிரஸ் கட்சி, தற்போது ஓட்டுக்களாகஅறுவடை செய்துள்ளது.பினராயி விஜயன் அரசுக்கு தேர்தலில் பதிலடியை தர நினைத்த மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டுக்களை அளித்தால் அது நிறைவேறாது என்பதால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு ஓட்டுக்களை வாரி வழங்கியுள்ளனர். இதனால், காங்கிரஸ், 20க்கு 19 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சி மற்றும் அரசுக்கு எதிரான எதிர்ப்பலையில், பா.ஜ.,வாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.பா.ஜ., வெற்றி பெறும் என எதிர் பார்க்கப்பட்ட திருவனந்தபுரம், பத்தனம்திட்டை, திருச்சூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கையே ஓங்கியுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)