இந்த தொகுதியில் ஜெயிக்கும் கட்சியே, ஆளுங்கட்சியாக வரும் என்ற நம்பிக்கை, பல சட்டசபை தொகுதிகளுக்கு இருப்பது போல, விருதுநகரில் வெற்றி பெறும் கட்சியே, எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் என்ற, நம்பிக்கையும் உள்ளது.
கடந்த, 2006ல் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை துாசி தட்டினால், அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., வரதராஜன் வென்றார். தி.மு.க., ஆட்சியை பிடித்தது. 2011ல், தே.மு.தி.க., சார்பில் மாபா பாண்டியராஜன் வென்றார். கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., பிரிந்து எதிர்க்கட்சியானது. மாபா அ.தி.மு.க.,வில் இணைந்தது தனிக்கதை. கடந்த, 2016ல், தி.மு.க., சீனிவாசன் வென்றார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. இந்த நான்கு தவிர, மற்ற தேர்தல்களில் இங்கு வென்ற எந்த கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில்லை.
காமராஜரையே தோற்கடித்ததால் என்னவோ, 'அரசியல் சாபத்தால்' விருதுநகர் தொகுதிக்கு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களே வலம் வரும் நிலை இன்று வரை உள்ளது. தி.மு.க., ஐந்து , அ.தி.மு..க, இரண்டு, சோஷியலிஸ்ட் காங்., - ம.தி.மு.க., - த.மா.கா., - தே.மு.தி.க., தலா ஒரு முறையும் வென்றுள்ளன. இம்முறை தி.மு.க., - பா.ஜ., - அ.ம.மு.க., என, மும்முனை போட்டி நிலவுகிறது. வெல்லும் கட்சி எதிர்க்கட்சியில் தான் இருக்குமா என்பதை, பொறுத்திருந்து பார்க்கலாம்; ராசி நல்ல ராசி தான்.
வாசகர் கருத்து