14ல் 12: பா.ஜ., அமோகம்

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தம் உள்ள, 14 தொகுதிகளில், 12ல் வென்று, பா.ஜ., சாதனை படைத்துள்ளது.ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில், மோடி அலை வீசிய நிலையிலும், இம்மாநிலத்தில், ஏழு தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றது. எனினும், இதன் பின் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 82 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி, 42 இடங்களில் வென்று, ஆட்சியை பிடித்தது.முதல்வராக, ரகுபர்தாஸ் பொறுப்பேற்றார்.இம்மாநிலத்தை சேர்ந்தவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான, யஷ்வந்த் சின்ஹா, பிரதமராக மோடி பதவியேற்ற பின், பா.ஜ.,வையும், மோடியையும், பகிரங்கமாக விமர்சித்து வந்தார். லோக்சபா தேர்தலில், மோடிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தார்.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு ஓரணியாகவும், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து எதிரணியாகவும் போட்டியிட்டன.மொத்தம் உள்ள, 14 தொகுதிகளில், 12 இடங்களை, பா.ஜ., கூட்டணி கைப்பற்றி, சாதனை படைத்துள்ளது.மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர்கள், ஜே.எம்.எம்., கட்சியை சேர்ந்த சிபு சோரன், ஜே.வி.எம்., கட்சியின், பாபுலால் மாரண்டி, பா.ஜ.,வை சேர்ந்த அர்ஜுன் முண்டா ஆகியோர் தோல்வியடைந்தனர்.பா.ஜ., கூட்டணி - 12கட்சி - வெற்றி - முன்னிலை - மொத்தம்பா.ஜ., - - 1 -10 - 11ஏ.ஜே.எஸ்.யு., - 1 - 0 - 1-காங்., கூட்டணி - 2கட்சி - வெற்றி - முன்னிலை - மொத்தம்காங்., - 1 - 0 - 1ஜே.எம்.எம்., - 0 - 1 - 1===================2014 தேர்தல் முடிவுகள்பா.ஜ., - 7காங்., - 1ஜே.எம்.எம்., - 2ஜே.வி.எம்., - 2சுயேச்சை - 2வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு