ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் வாழ்த்து

சென்னை, இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.* தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் தங்களுக்கு என் இதயமார்ந்த வாழ்த்துகள்.* பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: 2014ல் பிரதமராக தாங்கள் பதவியேற்றபோது 'இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன்' என்று உறுதி அளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாக இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். நாட்டின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.* இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற தலைவர் தேவநாதன் யாதவ்: தங்களின் மனிதநேயம் தைரியம் அன்பு பொறுமை அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவை புதிய யுகத்திற்கு கொண்டு செல்லட்டும். தங்கள் தலைமையில் புதிய இந்தியாவை உருவாக்கி உலகிற்கு ஒளிகாட்டும் கலங்கரை விளக்கமாக செயல்பட வேண்டும். உங்கள் அனைத்து செயல்களும் வெற்றிகரமாக அமைய மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்.நடிகர் ரஜினி: நரேந்திர மோடிஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சாதித்து விட்டீர்கள். கடவுள் துணையிருப்பார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)