பார்லிமென்டிலும் வெளிநடப்பு செய்வார்கள் தி.மு.க., எம்.பி.,க்கள் குறித்து தமிழிசை கிண்டல்

துாத்துக்குடி, தமிழக சட்டசபையில் வெளிநடப்பு செய்வது போல் இனி பார்லிமென்ட்டிலும் தி.மு.க., வெளிநடப்பு செய்யும் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்தார்.துாத்துக்குடியில், தமிழிசை கூறியதாவது: ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. தொங்கு பாராளுமன்றமாக அமையாமல் தங்கும் பாராளுமன்றமாக அமைத்த மக்களுக்கு நன்றி.தமிழக மக்களிடமிருந்து ஓட்டுகளை பெற முடியாதற்கான காரணம் பற்றி ஆத்ம பரிசோதனை செய்வோம். நான் இந்த தொகுதிக்கு சிலவற்றை செய்யவேண்டும் என திட்டமிட்டிருந்தேன். தமிழகத்திற்கு தேவையானதை உரிமையோடு கேட்டு பெற்றிருப்போம்.தி.மு.க.,வின் இந்த வெற்றி பெரிது அல்ல. இதனால் ஸ்டாலினுக்கும் பலனில்லை, தமிழகத்திற்கும் பயனில்லை. துாத்துக்குடி தொகுதி வேட்பாளர் உட்பட பலர் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்பது கேள்விக்குறிதான்.இதுவரை தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த தி.மு.க.,வும் ஸ்டாலினும், இனி பார்லிமென்ட்டிலும் செயவார்கள்.தமிழகத்தில் மத்திய திட்டங்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரம் எடுபட்டுவிட்டதோ என்ற சந்தேகம் உள்ளது.எங்கள் கட்சியினர் எம்.பி., ஆகாவிட்டாலும் தமிழக மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துவோம். தமிழகம் விரைவில் தேசிய நீரோட்டத்திற்கு வரும் என்ற நம்பிக்கை கொள்கிறேன். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)