'திரும்ப திரும்ப பேசுற நீ...'ன்னு வடிவேலுவை பார்த்து ஒருத்தர் கத்துவாரு. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, நம்மை 'டென்ஷன்' ஆக்குறதுல, அரசியல்வாதிங்களும் வடிவேலு மாதிரி தான்.
புதுசா என்ன நடந்துச்சுனு யோசிக்க வேண்டாம். ரொம்ப பழய கத. 1970ல, கூவத்துல கருணாநிதி காசு போட்ட கத. கூவம் நதியை சுத்தம் செய்யப் போறோம்னு புதுசா திட்டம். மூணு கோடி ரூபா அப்போ ஒதுக்கிருக்கார். அவரும், சில அமைச்சர்களும் கூவத்துலபடகு சவாரி போனாங்க. முதற்கட்ட பணி முடிஞ்சதா சொன்னாரு.
கூவம் வேலை எப்போ முடியும்னு காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் சட்டசபைல கேள்வி கேட்டாங்க. மூணு நாள் கழிச்சு சொன்னாரே ஒரு விஷயம். கூவத்துல சுத்தம் செய்ற வேலய, 'டிராப்' பண்றோம்னு. கூவத்துக்குள்ள முதலை இருந்துச்சாம். சுத்தம் செய்ய யாராவது இறங்கினா கடிச்சு போட்ருமாம். அதனால, ஆளுகளும் வேலைக்கு வரமாட்டாங்க. மூணு கோடி ரூபா முதற்கட்ட பணிக்கே செலவாயிருச்சுனு முடிச்சுட்டார்.
'கூவத்துக்குள்ள காசை அள்ளி போட்டுருக்காங்க. கூட, ஒரு முதலையையும் விட்டுருக்காங்க'ன்னு இத வச்சி அப்போ கவிஞர் கண்ணதாசன் பாட்டா எழுதினாரு. கலைஞர் கடுப்பாகி பாடலுக்கு தடை விதிச்சாரு. வரி மாறி வந்துருச்சு பாடல். இது, 1970 ல நடந்தது.
அரை நுாற்றாண்டுக்கு பின், மகன் இப்போ தேர்தல் அறிக்கைல 'ஆறுகள் மாசடையாமல் தடுக்க, பாதுகாப்பு திட்டம்'னு சொல்லிருக்கார். 'அள்ளிப்போட பணமும் இல்லே அவுத்துவிட முதலையும் இல்லே...'னு கவிஞர் ர.ர., பாடல் எழுதிகிட்டு இருக்கார்.
வாசகர் கருத்து