காவலாளி பட்டத்தை நீக்கினார் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து காவலாளி பட்டத்தை நீக்கினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: என் ஒரு பகுதியாக காவலாளி இருக்கிறார். அந்த வார்த்தை என்னை உற்சாகப்படுத்துகிறது. அதைவைத்துக்கொண்டு நீங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுங்கள். அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்! என டுவிட்டரில் மக்களுக்காக பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.




தற்போது, காவலாளிக்கான வேகத்தை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட இந்த வேகத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். காவலாளி வார்த்தை எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சென்றிருக்கலாம். ஆனால், என்னில் ஒரு பகுதியாக உள்ளது. இதனையே நீங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பட்டத்தை சேர்த்தார். இதனை தொடர்ந்து, பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் மோடியை பின்பற்றினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)