ராகுலுக்கு காங்., ஓய்வு தரலாம்: பாஜ அமைச்சர்

புதுடில்லி : ராகுல் அரசியலில் இருந்து விலகாவிட்டால், அவருக்கு அக்கட்சி மரியாதையான ஓய்வு அளித்து விடுவது தான் நல்லது என அசாம் நிதியமைச்சரும், பா.ஜ., தலைவருமான ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றி மற்றும் காங்.,ன் படுதோல்வி குறித்து செய்தி சேனல் ஒன்றிற்கு சர்மா பேட்டி அளித்துள்ளார். அதில், ராகுலை நான் இதுவரை 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்திருக்கிறேன். அவரை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, அவரை காங்.,க்குள் தள்ளிவிட்டு விட்டார். அதிகார பின்னணியில் இருந்து வந்தவர் ராகுல். அதனால் அவருக்கு உடன் இருப்பவர்களை மதிக்க தெரியாது.
அவர் அரசியலில் இருந்து விலகவில்லை என்றால், காங்., அவருக்கு மரியாதையான ஓய்வு அளித்து விடலாம். இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜ., ஆட்சி தான் நடக்கும். எதிர்க்கட்சி என்பதே இருக்காது. பா.ஜ., மட்டும் தான் இருக்கும். மோடி தான் பிரதமராக இருப்பார். வாரிசு பின்னணி இல்லாத ஒருவர் காங்., தலைவராக பொறுப்பேற்றால் ராகுலை விட நன்றாக கட்சியை வழிநடத்த முடியும்.
அரசியலில் மம்தாவின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அடுத்த சில மாதங்களில் அவரின் ஆட்சி கவிழும் என்பதையே பா.ஜ.,வின் பிரம்மாண்ட வெற்றி காட்டுகிறது. அடுத்த 100 நாட்களில் மம்தாவின் ஆட்சி கவிழும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)