விட்டதை மீண்டும் பிடித்த பா.ஜ.,

புதுடில்லி: கடந்தாண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்த 4 மாநிலங்களில், பா.ஜ., தற்போது மீண்டும் வெற்றிபெற்று சாதித்துள்ளது,

கடந்த 2018ல், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது பா.ஜ., அதே போல தென்மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு ஆட்சியை கொடுத்திருந்த கர்நாடகாவிலும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணியிடம் ஆட்சியை இழந்தது பா.ஜ.,
சமீபத்திய மாதங்களில் இங்கெல்லாம் வெற்றிபெற்ற காங்கிரஸ், தற்போதைய லோக்சபா தேர்தலில் பரிதாபமாக தோற்கும் நிலையில் உள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பா.ஜ., முன்னிலையில் உள்ளது. சத்தீஷ்கரில் உள்ள 11 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பா.ஜ., முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 25 தொகுதியில் 24 ஐ கைப்பற்றும் நிலையில் உள்ளது.

தென்மாநிலமான கர்நாடகாவிலும், மொத்தமுள்ள 28 ல், 23 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது பா.ஜ., இங்கெல்லாம் தான் இழந்துவிட்ட செல்வாக்கை, சில மாதங்களிலேயே மீண்டும் மீட்டெடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது பா.ஜ.,

இதற்கு பிரதமர் மோடியின் பிரசாரம் மற்றும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல், தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களே காரணம் என்று தெரியவருகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)