பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

புதுடில்லி: தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள பிரதமர் மோடிக்கு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ வெளியிட்ட அறிக்கை: இந்தியா இஸ்ரேல் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.

இலங்கை அதிபர் சிறிசேனா:உங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கும், வெற்றி பெற்றதற்காகவும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவுடனான சுமூக உறவு எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவை முன்னெடுத்து செல்லும் உங்களின் தலைமையில் கீழ் மக்கள் சிறப்பாக உள்ளார்கள்.

ரணில் விக்ரமசிங்கே: அபார வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துகள். உங்களுடன்இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்

முன்னாள் அதிபர் ராஜபக்சே வெளியிட்ட அறிக்கை:இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி வெளியிட்ட வாழ்த்து செய்தி: இந்திய மக்களின் வலிமையான தீர்ப்பை பெற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆப்கன் மக்களும், அரசும் ஆர்வமாக உள்ளது எனக்கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கை: தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்துகள். தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, பூடான் அரசர் கேசர் நாம்கியேல் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஷி ஜிங்பிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)