பயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு'

சென்னை : கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே, தமிழக மக்களின் தீர்ப்பு, இந்த தேர்தலிலும் பயனற்றுப் போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. இது, இந்தியாவோடு இணைந்து தமிழகம் சிந்திப்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மோடியா ; லேடியா?:கடந்த 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப்போட்டியிட்டது. அப்போதைய முதல்வர் ஜெ., 'மோடியா, லேடியா' என்ற கோஷத்தை தமிழக மக்களிடம் முன் வைத்தார். அந்த தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 37ல் வெற்றி கிடைத்தது. ஆனால், நாடுமுழுவதும் மோடி அலை வீசி, தனிப்பெரும்பான்மை பெற்ற பா.ஜ., மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது.
இதனால், மத்திய அரசை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. பா.ஜ.,வுக்கு ஜெ., ஆதரவு தேவைப்படாததால், அமைச்சரவையிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதிகபட்சமாக தம்பித்துரை துணை சபாநாயகர் ஆனதோடு, 5 ஆண்டுகள் கடந்து போனது. பா.ஜ., தலைமையிலான 3வது அணியில், பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் வெற்றி பெற்று, இணை அமைச்சராக பொறுப்பேற்றார். மற்றொருவர் பா.ம.க., அன்புமணி மட்டுமே.

சாதகமற்ற நிலை :
இதனால் தான், 'நீட்' தேர்வு, காவிரி நதி நீர் பிரச்னை, புயல் நிவாரண நிதிகள் பெறுவது, பட்ஜெட் ஒதுக்கீடு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்குதல் போன்ற முக்கிய பிரச்னைகள் எதிலும், தமிழகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்த முடியவில்லை.

தி.மு.க., காங்., கூட்டணி :
அதேபோன்ற நிலை தான் இந்த முறையும் ஏற்பட்டுள்ளது. தற்போதும், லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 340 க்கும் அதிகமான எம்.பி.,சீட்டுகளுடன் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்குத்தான் தமிழக மக்கள், 36 தொகுதிகளில் முன்னிலை அளித்துள்ளனர்.

பயனற்ற தீர்ப்பு :
அதனால், இந்தமுறையும் மத்தியில் அமையும் ஆட்சிக்கு தமிழகத்தின் தயவு தேவையில்லை. இதனால், ஆட்சியில் பங்கேற்கவும் வாய்ப்பில்லை. எனவே, தமிழகத்தின் குரல் இந்திய அரசின் முடிவுகளில் எதிரொலிக்க எந்த வாய்ப்புமின்றி, தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான 'தீர்ப்பு' இந்த முறையும் பயனற்றுப் போகிறது. இதற்கு இந்தியாவின் மனநிலையோடு சேர்ந்து சிந்திக்காமல், தமிழகம் மட்டும் தனியாக சிந்திப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)