இது அலை அல்ல சுனாமி:சவ்கான்

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் 340 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. 2014 லோக்சபா தேர்தலை விட பா.ஜ., கூடுதல் இடங்களை இம்முறை பெறுவது உறுதியாக உள்ளது. பா.ஜ.,வின் இந்த வெற்றி பற்றி அக்கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜ்நாத் சிங் : இது வரலாற்று வெற்றி. இந்த வெற்றி பிரதமர் மோடியின் மதிநுட்பமான தலைமைக்கும், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் சுறுசுறுப்பு மற்றும் கோடிக்கணக்கான பா.ஜ., தொண்டர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
சிவராஜ் சிங் சவ்கான் : இது பா.ஜ., அலை அல்ல. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., சுனாமி என்பதையே லோக்சபா தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கிறது. மோடி நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். தெய்வத்திற்கு நிகரான மக்கள் சக்தியின் ஆசி மோடிக்கு உள்ளது. ம.பி.,யில் காங்., தவறான வாக்குறுதிகளை கொடுத்து, நாங்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது. அதனால் தான் மக்கள் கோபமடைந்து காங்., க்கு எதிராக ஓட்டளித்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)