உ.பி., யில் மீண்டும் பறக்குது பா.ஜ., கொடி

லக்னோ : இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி.,யில், இரண்டு முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கைகோர்த்தும் பா.ஜ.,வின் வெற்றியை தகர்க்க முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட, தலித் சாதி அரசியலை பின்னுக்குத் தள்ளி பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவில், 80 லோக்சபா தொகுதிகளை கொண்டது உ.பி., நிலப்பிரிவில் நான்கு முக்கிய மண்டலங்களை கொண்டது. இங்கு பெரிதும் பிற்பட்ட சாதிகளின் பிரதிநிதி போல சமாஜ்வாடி கட்சியும், தலித் மக்களை வாக்கு வங்கியாகக்கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியும் தான் நீண்டகாலமாக கோலோச்சி வந்தன.

இந்த நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில், 73 தொகுதிகளை கைப்பற்றியது பா.ஜ.,. அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.,வே ஆட்சியை கைப்பற்றி யோகி ஆதித்யநாத் முதல்வரானார். இந்த நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்கு பரம்பரை எதிரிகளான பகுஜன் மற்றும் சமாஜ்வாடி இரண்டும் கைகோர்த்தன.

'மகாகட்பந்தன்' என்ற அந்த கூட்டணி மூலம், மொத்த தொகுதிகளையும் அள்ளப் பார்த்தன. ஆனால், பா.ஜ., மகாகட்பந்தன், காங்கிரஸ் என்று 3 முனை போட்டி நிலவிய உ.பி.,யில் மீண்டும் பா.ஜ.,வே அபார முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில், 56 தொகுதிகளை கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)