இரவு முழுவதும் காவல்காத்த எதிர்க்கட்சி தொண்டர்கள்

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் கூறி வரும் நிலையில், முறைகேடுகள் நடக்காமல் இருக்க, நாட்டின் பல பகுதிகளில், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகம் முன்பு எதிர்க்கட்சியினர் இரவு முழுவதும் காவல் காத்தனர்.
லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (மே23) எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்களில், பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. ஆனால், இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள், 'தேர்வு செய்யப்படும், ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவான ஒப்புகை சீட்டுகளை தான் முதலில் எண்ணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். அதில் முரண்பாடு ஏற்பட்டால், அந்த தொகுதியில் பதிவான அனைத்து ஓட்டுகளையும் எண்ணி, ஒப்பிட வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில், ம.பி., மாநிலம் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங், தனது மனைவியுடன் சென்று ஓட்டுப்பதிவு வைக்கப்பட்ட அறையை பார்வையிட்டார்.
உ.பி., மாநிலம் மீரட் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் பதிவான ஓட்டுகள் வைக்கப்பட்ட அறைகள் முன்பு ஏராளமான காங்கிரசார் அமர்ந்திருந்தனர்.

சண்டிகரில் ஸ்டிராங் ரூம் எனப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில், காங்கிரசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அசாமின் கம்ரூப் நகரில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு செல்லும் சாலையை காங்கிரசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் நிருபம் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.


மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா , மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், ஸ்டிராங் அறை கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். அங்கு கண்காணிப்பு பணியை ஆய்வு செய்ய சிசிடிவி கேமரா கடவுச்சொல்லை, வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)