ஆட்சியை பிடித்து விடலாம் : நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள்

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் 14 ல் 12 கருத்துகணிப்புக்கள் பா.ஜ., 300 இடங்களுக்கு மேல் பிடித்து, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ஆனால் கருத்துகணிப்புக்கள் பொய்யானவை என கூறி வரும் எதிர்க்கட்சிகள், மத்தியில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன், தொடர்ந்து பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றன.


பல சமயங்களில் கருத்துகணிப்புக்கள் பொய்யாகும் என்பதால், பா.ஜ., வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, காங்., தலைமையில் புதிய ஆட்சி அமைய துணை நிற்கலாம் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் முனைப்புடன் உள்ளார். இதனால் பல கட்சிகளையும் இணைக்க அவர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 3வது அணி அமைக்க சந்திரபாபு நாயுடு ஒரு புறமும், சந்திரசேகர ராவ் ஒருபுறமும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் பல மாநில முதல்வர்களையும், கட்சி தலைவர்களையும் இவர்கள் சந்தித்து வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க சரத்பவாரும் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஜெகன் மோகனை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் சந்திரசேகர ராவும், நவீன் பட்நாயக்கும் மத்தியில் காங்., தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தருவார்கள் என நம்புகிறார் சரத்பவார்.

மம்தா, மாயாவதி, அகிலேஷ், ராகுல், சோனியா ஆகியோரை தொடர்ந்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை சந்தித்து கூட்டணி சேர்க்க பேச்சு நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவுடன் தொடர்பில் இருந்து வருகிறார் சரத் பவார். சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு, தங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார் என்றும், நவீன் பட்நாயக்கும், காங்.,ன் கமல்நாத்துடன் பால்ய நண்பர்கள் என்பதால் நவீன் பட்நாயக்கும் தங்கள் பக்கம் வந்து விடுவார் என்றும் சரத்பவார் நம்புகிறார்.


நவீன் பட்நாயக் யாருக்கும் தனது ஆதரவை கூறவில்லை என்றாலும், புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு அதிக நிதி தரும் எந்த கட்சியையும் ஆதரிக்க தயார் என அறிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)