கருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர்

புதுடில்லி: கடந்த 19ம் தேதி நடத்தப்பட்ட லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பை 5.6 லட்சம் பேர் டுவிட் செய்துள்ளனர்.

பார்லி. லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி துவங்கி ஏப்ரல் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் முதன் முறையாக பதிவான ஒட்டுகளை சரிபார்க்கும் வகையில் விவிபாட் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற ஏப்.,11ம் தேதி 1.2 லட்சம் பேர் டுவி்ட் செய்திருந்தனர். இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் கடந்த19ம் தேதி இறுதி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று மாலையே பல்வேறு டி.வி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இதில் ஐ.ஏ.என்.எஸ் சிவோட்டர் நிறுவனம் பா.ஜ., 236 இடங்களை மட்டுமே பெற கூடும் என கருத்து வெளியிட்டிருந்தன.மற்ற அனைத்து செய்தி சேன்லகளும் பா.ஜ.,300 இடங்கள் வரை பிடித்து பிரதமர் மோடி மீண்டும் 2 தடவையாக ஆட்சியை கைப்பற்றுவார் என்ற கருத்து கணிப்பை வெளியிட்டன.கடந்த 19ம் தேதி மாலை 6.30 மணி முதல் மறுநாள் (திங்கட்கிழமை) 20-ம் தேதி வரையில் வளியான கருத்து கணிப்புகளை சுமார் 5.6 லட்சம் பேர் டுவிட்டர் மூலம் பார்த்துள்ளனர். முன்னதாக முதல்கட்ட தேர்தல்நடைபெற்ற போது டுவிட் செய்தவர்களின் எண்ணிக்கை 1.2 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)