'தி.மு.க., முகத்தில் கரி!' ராமதாஸ் அறிக்கை

சென்னை:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை:தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட, எட்டு ஓட்டுச்சாவடிகளை, பா.ம.க.,வினர் கைப்பற்றி, அதிக ஓட்டுக்களை பதிவு செய்தனர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி, மறு ஓட்டுப்பதிவுக்கு, தி.மு.க., கோரிக்கை வைத்தது.தி.மு.க.,வின் குற்றச்சாட்டு உண்மை என்றால், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்ட இடங்களில், கணிசமான அளவில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், எந்த ஓட்டுச்சாவடியிலும் அப்படி நடக்கவில்லை.தி.மு.க., முகத்தில், மக்கள் கரியை பூசியுள்ளனர். எனவே, தர்மபுரி மக்களிடம், தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)