கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா

புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். இது போன்ற கணிப்புகள் நம்மை தளர்வு அடைய செய்யும் நோக்கம் கொண்டவை என்றும் காங்., உ.பி.,பொது செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்பில் பா.ஜ., கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இதனை காங்., தரப்பில் யாரும் ஏற்கவில்லை. இது தொடர்பாக முதன்முதலாக கருத்து வெளியிட்டுள்ள பிரியங்கா அவரது டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தியை பதிவிட்டுள்ளார். கருத்துக்கணிப்பால் யாரும் சோர்வைடைய வேண்டாம். நம்பிக்கையும் இழக்க கூடாது.
நமது கடின உழைப்பு கனியை தரும். நமது உழைப்பு வீண் போகாது. ஓட்டு எண்ணும் மையத்தில் நமது ஏஜன்ட்டுகள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)