கவராத கணிப்பு: காத்திருக்கும் பா.ஜ.,

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பிரதமர் மோடியே கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் லோக்சபா தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து கணிப்புகள் வெளியாகின. இவற்றில் பெரும்பாலும் பா.ஜ., கூட்டணியே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கணிப்புகளில் உ.பி., நிலவரம் மட்டும் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. இங்கு சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி அதிக இடங்களைப் பெறும் என்று சில ஊடகங்களும், பா.ஜ., அதிக இடங்களைப் பெறும் என்று சில ஊடகங்களும் ‛அருள்வாக்கு' கூறி உள்ளன.2014 தேர்தலில் உ.பி.,யில் மட்டும் 71 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. எனவே இம்முறை உ.பி., பற்றி தெளிவான முடிவுகள் தெரிந்தால் தான் கருத்து கணிப்புகளை நம்ப முடியும் என்று மோடி நினைக்கிறாராம்.
உ.பி.,யில் சமாஜ்வாதி கூட்டணி 58 இடங்களைப் பெறும் என்றும், பா.ஜ., கூட்டணி 22 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஏ.பி.பி., நீல்சன் அமைப்பு கூறி உள்ளது.அதே உ.பி.,யில் 60 - 62 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என்று நியூஸ் 18 கூறி உள்ளது. இந்தியா டுடே கூறும்போது 62 - 68 இடங்களை பா.ஜ., பெறும் என்று கூறி உள்ளது. என்.டி.டி.வி., பா.ஜ., கூட்டணி 46 இடங்களைப் பெறும் என்று சொல்லி உள்ளது.

உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு பாதகமா:
உ.பி.,யில் சமாஜ்வாதி - பகுஜன் - ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகள் கூட்டணி வைத்தபோதே, இது பா.ஜ.,வுக்கு பாதகமாகத் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எத்தனை தொகுதிகளை பா.ஜ., இழக்கும் என்பது தான் கேள்விக்குறி. இதை தேர்தல் நிபுணர்களால் கூட கணிக்க முடியவில்லை.
உ.பி.,யில் பா.ஜ., மட்டுமல்ல சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணியும் எதிர்பார்த்த இடங்களைப் பெறாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், சும்மா கூட்டணி சேர்வது மட்டும் பயன் தராது. அதை ஓட்டுகளாக மாற்றுவது தான் திறமை. கருத்துக் கணிப்புகளை பார்க்கும்போது, இந்த கூட்டணி, மக்களை ஓட்டளிக்க வைக்கவில்லை என்பதும் புரிகிறது.2014 தேர்லைப் போல இந்த தேர்தலில் மோடி அலை என்று தனியாக எதுவும் இல்லை. ஆனால் மோடி இன்னமும் புகழ் பெற்ற தலைவராகவே இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.தேர்தல் முழுக்க, மோடியை மட்டுமே பா.ஜ., மையப்படுத்தி பிரசாரம் செய்தது. பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., எடுத்த வியூகங்களும் அக்கட்சிக்கு ஓட்டுகளை பெற்றுத்தரலாம்.

பிரியங்கா வந்தும் பயன் இல்லையா:உ.பி.,யில் காங்.,கிற்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என பெரும்பாலான கணிப்புகள் கூறுகின்றன. அநேகமாக அந்த தொகுதிகள் அமேதியாகவும் ரேபரேலியாகவும் இருக்கலாம். 2014 தேர்தலிலும் இந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், காங்., பொதுச்செயலாளராக பிரியங்கா பணியேற்றதும், தீவிர பிரசாரம் செய்ததும் பயன் தரவில்லை என்பதே.இவரது பிரவேசம், பா.ஜ., கூட்டணியை விட, சமாஜ்வாதி கூட்டணி ஓட்டுகளை அதிகம் ‛காவு' வாங்க வாய்ப்பு உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)