பெண்களுக்கு ராகுல் 'சல்யூட்'

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், தாய்மார்கள் மற்றும் பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்' என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: இந்த லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களாக மட்டுமல்லாமல் வாக்காளர்களாகவும், நாடு முழுவதும், நமது தாய்மார்களும், சகோதரிகளும் முக்கிய பங்காற்றி உள்ளனர். அவர்களுக்கு எனது சல்யூட். பெண்கள் தெரிவிக்கும் குறைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும்; மதிப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவுடன், பெண்களை போற்றும் விதமாக காங்., வெளியிட்டுள்ள வீடியோ பதிவையும் இணைத்துள்ளார். அதில், பெண்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி குறித்து பேசுவது இடம்பெற்றுள்ளது. மேலும் நடப்பு தேர்தலில், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் இருக்கப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)