குஜராத்தில் மீண்டும் மோடிக்கு மரியாதை: கருத்து கணிப்பு

புதுடில்லி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த முறை, மொத்தமுள்ள 26 இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியது. இந்த முறையும், அனைத்து இடங்களையும் கைப்பற்றி விட வேண்டும்; ஒரு இடம் கூட குறையக்கூடாது என்று, மோடி அமித் ஷா கூட்டணி, தீவிரமாக பிரசாரம் செய்தனர். அதன் பயனாக, குஜராத் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 25 முதல் 26 இடங்கள் வரை கிடைக்கும் என்று இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அதிகபட்சமாக ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

காங்., ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், 25 எம்.பி., இடங்கள் உள்ளன. இதில், பா.ஜ., சார்பில், இந்த தேர்தலில், 23 முதல், 25 இடங்கள் வரை வெற்றி பெறுவர் என்றும், காங்., சார்பில் அதிகபட்சம் 2 இடங்கள் பெறலாம் என்றும் என்.டி.டி.வி., தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் என்.டி.டி.வி., நடத்திய கருத்து கணிப்பில், காங்கிரஸ் கூட்டணிக்கு, 13 இடங்கள் கிடைக்கும் என்றும், இடதுசாரிகளுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என்றும், பா.ஜ., கூட்டணிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், முந்தைய லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 8 இடங்களையும், இடதுசாரிகள் 5 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் 'குளோஸ்'டில்லி மாநிலத்தில், 7 தொகுதிகள் உள்ளன. இவற்றில், கடந்த தேர்தலில் ஏழு தொகுதிகளையும் பா.ஜ,. கைப்பற்றியது. இந்த முறை, அவற்றில் எப்படியும் வென்று விட வேண்டும் என்பதற்காக, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் தீவிரம் காட்டினர்.இதேபோல, காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மேக்கன் ஆகியோரை களம் இறக்கியது. எனினும், நேற்று வெளியான இந்தியா டுடே கருத்து கணிப்பில், பா.ஜ., 6 முதல் 7 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்., ஒரு இடம் கைப்பற்றும் என்றும், பிற கட்சிகளுக்கு எதுவும் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முடிவுகள் எப்படி:மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், 42 எம்.பி., இடங்களை கைப்பற்ற, பா.ஜ.., மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த மோதல் காரணமாக, பல இடங்களில் வன்முறை வெடித்தது. வேட்பாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.நேற்று இறுதி கட்ட தேர்தல் முடிந்த நிலையில், வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பல்வேறு தொலைக்காட்சிகளின் கருத்தின்படி, மம்தா கட்சிக்கு 19 முதல் 22 இடங்கள் கிடைக்கும் என்றும், பா.ஜ., கட்சிக்கு, 19 முதல் 23 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் இந்தியா டுடே ஆக்சிஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்.டி.டி.வி., நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில், பா.ஜ.,14 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலத்தில் என்ன நிலவரம்வாக்கு கணிப்புகளின்படி, உத்தரபிரதேச மாநிலத்திலும் பா.ஜ., கூட்டணியே அதிக இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2014 தேர்தலில், இந்த மாநிலத்தில், பா.ஜ., 71 இடங்களை வென்றது; இதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் இரண்டு இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் டைம்ஸ் நவ்-வி.எம்.ஆர்., கணிப்பின்படி, உ.பி., மாநிலத்தில், பா.ஜ., கூட்டணி, 58 இடங்களை பிடிக்கும். ரிபப்ளிக்-ஜன் கி பாத் கணிப்பின்படி, இந்த மாநிலத்தில், பா.ஜ., கூட்டணி, 57 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஏ.பி.பி., நியூஸ்-நீல்சன் கணிப்பின்படி, பா.ஜ., கூட்டணி, உ.பி., மாநிலத்தில், 22 இடங்களை கைப்பற்றும்; சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, 56 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

'கர்நாடகாவிலும் பா.ஜ., கொடி தான்':கர்நாடகத்தில், ஏப்., 18, 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் -ம.ஜ.த., கூட்டணி அமைத்து, முறையே 21, 7 தொகுதிகளில் போட்டியிட்டன. மாண்டியாவை தவிர, 27 தொகுதிகளில் பா.ஜ., தனித்து களமிறங்கியது; மாண்டியாவில், சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்தது.நாடு முழுவதும், லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நேற்று மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்ததால், 6:30 மணிக்கு, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல நிறுவனங்கள் நேற்று வெளியிட்டன. அதன்படி, அனைத்து கருத்து கணிப்புகளிலும், கர்நாடகத்தில், பா.ஜ., தான் அதிக தொகுதிகளை கைப்பற்றும். கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், ம.ஜ.த.,வுக்கு பெரும் பின்னடைவுஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கர்நாடகத்தின் கூட்டணி ஆட்சியிலும் மாற்றம் ஏற்படுமோ என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.பல கருத்து கணிப்புகளில், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறியிருப்பதால், அது மாண்டியாவின் சுமலதாவாக இருக்குமோ என்ற கருத்து வெளியாகியுள்ளது. கடந்த 2014 தேர்தலில் பா.ஜ., - 17, காங்கிரஸ் - 9, ம.ஜ.த., - 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.உண்மை நிலவரம்:தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. உண்மையான முடிவுகள், ஓட்டு எண்ணும் நாளான மே 23 மாலைக்கு மேல் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)